Pongal Celebration'26



திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா


திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஜனவரி மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி சமத்துவ பொங்கல் விழா முறையாக அனுசரிக்கப்பட்டது. இவ்விழாவிற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.V.P மோஹன்காந்தி MS(Ortho) அவர்கள் தலைமையேற்று விழாவை நடத்தினார்.


விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் மரு.N. திலகவதி MD(Micro)அவர்கள், மருத்துவ கண்காணிப்பாளர் மரு.T. சுரேஷ் பாபு MS,MCh அவர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், அமைச்சு பணியாளர்கள், கல்லூரியின் மாணவர்கள் கலந்து கொண்டு சமத்துவம், ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கம் குறித்த விழிப்புணர்வை வெளிப்படுத்தினர். அனைவரும் உற்சாகத்துடன் பங்கேற்று விழாவை சிறப்பாகக் கொண்டாடினர்.


இந்த சமத்துவ பொங்கல் விழா சமூக சமத்துவம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

Go To Top